விட்டிருகை தொழுதிருக்க 
கற்ற மொழியுற்ற பணி 
சுற்றமென  அத்தனையும்
விட்டொழித்து பற்றறுக்கும் 
பக்குவத்தைத் தரவேண்டும் 
தொட்ட துணையுற்ற பொருள்   
மற்றதெது அத்தனையும் 
நட்டமில்லை விட்டிடினும்
பற்றிடவே உந்தன்  திருவடி வேணும்
சுற்றும் விதி கெட்ட மதி 
பற்றும் பிணி தொற்றுமொரு 
ஆசையென விட்டகலா 
வேதனையும் எதற்காக? 
கண்ட விழி  கேட்டசெவி 
நுகர்ந்த நாசி  சுவைத்த நாவும் 
சுமந்த  மெய்யடக்கிடவே 
உன் துணை வேண்டும்!
விட்ட குறை தொட்ட குறை
என்றெதுவும் தேவையில்லை
விட்டு விடு இப்பிறவி இத்தோடு!   
அதை எடுத்துவிடு உன்னுடனே முப்பொழுதும்   
 --------------------------------------------------------------------  
நன்றி...........! .  
8 comments:
வேலுண்டு வினையில்லை
முருகன் அருள்வான்.
சட்டி சுட்டதா கை விட்டதா :)
எழுத்தே வித்தியாசமா இருக்கே... அழகு!
பித்ஸ், சிரிப்பு சித்தரா ஆயிருங்க!
//விட்டு விடு இப்பிறவி இத்தோடு!
//
இந்த பிறவி அலுத்துப்போச்சா
:)
மறுபிறவி இல்லா நிலையருள்வாய் முருகா
அருமை!
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி
Post a Comment