Friday, February 25, 2011

ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்




ஓம் நமச்சிவாயா

ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருணா லிங்கம்
ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
முந்திய வினைகளை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவர் கணங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர்விடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
எல்லாம் ஆகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரின் உருவின் பூஜைக்கோள் லிங்கம்
தேவ வணமலரை ஏற்றிடும் லிங்கம்
பரம நாதனாய் பரவிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக இதை தினமும்
சிவ சந்நிதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன்
சிவன் அருளும் கொள்வார்கள்





ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டகம் இதம் புண்யம் யே படேத் சிவ சன்னிதௌ
சிவலோகம் அவாப்நோதி சிவே ந ஸஹமோததே

Sunday, February 13, 2011

இசையாய் தமிழாய் இருப்பவனே..

இசையாய் தமிழாய் இருப்பவனே..
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..

இகபரசுகமருள் பரமகருணை வடிவே..
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..
இகபரசுகமருள் பரமகருணை வடிவே..
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்
பூந்தளிர் மலர் மாலையும்..
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்
பூந்தளிர் மலர் மாலையும்..
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..

வானவர்..
ஞானியர்..
வாழ்த்திடும்..
வடிவினையுடையாய்..
அருட்பெரும் சுடராய்..
அடியவர் மனதினிலே..

இசையாய் தமிழாய் இருப்பவனே..
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..
இகபரசுகமருள் பரமகருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

நந்திதேவனொடு இந்திராதியர்
வந்து தாழ்நினைவணங்கிடவே..
நந்திதேவனொடு இந்திராதியர்
வந்து தாழ்நினைவணங்கிடவே..

தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே..
தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே..

எந்தவேளையும் மறதிடாது
மறைசிந்து நான்முகன் பணிந்திடவே..
சந்தமார்குழலி இந்துநேர்வதனி
மங்களாம்பிகை மகிழ்ந்திடவே..

தவினுறு முகமதில் இளநகையே
கனிவுறு விழிகளில் அருள் மழையே..
சுவைபட வருவதும் எழுசுரமே
துணையென மொழிவதும் உயர்தமிழே..

மந்திரமாய்..
மாதவமாய்..
தந்திரமாய்..
தாரகமாய்..
வழிபடும் அடியவர் இருவினை பொடிபட
மழுமதி தனைவிடும் இனிய அபயகரமும்
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..

வானவர்..
ஞானியர்..
வாழ்த்திடும்..
வடிவினையுடையாய்..
அருட்பெரும் சுடராய்..
அடியவர் மனதினிலே...

இசையாய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே
இகபரசுகமருள் பரமகருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

Tuesday, February 8, 2011

நாத்திகம் வாழ்க!

ஆத்திகரைக் காட்டிலும் - நான்
நாத்திகரை போற்றுகின்றேன்!
விடையைத் தேடுபவர்,
விடையை அறிந்தவர்
எவர் பெரியோர் இவ்விடத்தில்?
இறையைத் தேடி இருப்பவர் ஆத்திகர்!
அதனைத் தேடி முடித்தவர் நாத்திகர்!
கடவுள் இல்லை என்பதை
நாத்திகம் சுருங்கச் சொல்கிறது!
அதையேதான் ஆத்திகமும் சொல்கிறது!
கடவுள் இல்லை - இது நாத்திகம்!
கடவுள் என்பது எதிலும் இல்லை - இது ஆத்திகம்!
கடவுள் என்பவர் எவரும் இல்லை!
கடவுள் என்பது எதுவும் இல்லை!
ஆதியும் இல்லை! அந்தமும் இல்லை!
உருவமும் இல்லை, அருவமும் இல்லை!
அகமும் இல்லை, புறமும் இல்லை!
மெய்யும் இல்லை, பொய்யும் இல்லை!
ஒளியும் இல்லை, இருளும் இல்லை!
அளவிடத் தகுந்த அளவும் இல்லை!
உணர்ந்திடத் தகுந்த உணர்வும் இல்லை!
விளங்கிடத் தகுந்த விளக்கமும் இல்லை!
இல்லை இல்லை இல்லை இல்லை!
இப்படி இத்தனை இல்லைகள் எனவும்
அத்தனை இல்லைகள் அனைத்திலும் அவனே!
இல்லைகள் என்பது இருக்கும் வரையே
இருக்கும் என்பதன் மதிப்பும் உயரும்!
நாத்திகம் இன்றி ஆத்திகம் இல்லை!
ஆத்திகம் இன்றி நாத்திகம் இல்லை!
நாத்திகம் வாழ்க! நாத்திகம் வாழ்க!
நயம்பட நானும் வாழ்த்துவேன் பாரீர்!
பக்கத்து இலைக்கும் பாயசம் தாரீர்!